சூலூர் சிறப்பு எஸ்ஐ தூக்கில் தற்கொலை
கோவை மாவட்டம் நீலாம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ் ஐ ஆக வேலை செய்து வந்தவர் அப்புன்னி என்பவரின் மகன் மனோஜ் ( 54). இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சங்கரமங்கலம்.
இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்து உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சிந்து ( 49 ) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மனைவி மற்றும் மகன்கள் கடந்த ஒரு வருடமாக சொந்த ஊரான பாலக்காட்டில் இருந்து வருகின்றனர்.
மனோஜ் குமார் சூலூர் அருகே காங்கேயம் பாளையம் பகுதியில் ராயல் அவன்யூ பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.தனியாக இறந்த காரணத்தினால் எஸ் எஸ் ஐ கடும் மன உளைச்சலில் இருந்ததாக புறப்படுகிறது. நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற இவர் தனது செல்போனில் தான் தற்கொலை செய்வதற்கு யாரும் காரணம் இல்லை எனவும், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்வதாகவும் அவரது செல்போனில் பேசி பதிவு செய்துவிட்டு வீட்டில் இருந்த ஃபேனில் நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் கதவை தட்டி உள்ளனர். வீட்டிற்குள் இருந்து எந்த சத்தமும் வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு மனோஜ் குமார் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மனோஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, எஸ் எஸ் ஐ தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர் .காவல்துறை எஸ் எஸ் ஐ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
