டாஸ்மாக் விற்பனையாளர்கள் 60 பேர் சஸ்பெண்ட்…!
கோவை கலால் மாவட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் மாவட்டங்கள். அடங்கியிருக்கிறது. இந்த மாவட்டங்களில் சுமார் 1100 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
மதுபான கடைகளில் குறைந்த பட்ச விற்பனை விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும் கூடுதலாக 10 ரூபாய், 20 ரூபாய் வாங்க கூடாது. பீர் பாட்டில்களுக்கு கூலிங் சார்ஜ் என அதிக கட்டணம் வாங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை மீறி மதுபானங்களுக்கு கூடுதல் விலை வாங்குவதாக தொடர்ந்து புகார் குவிந்து வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு செய்யப்பட்டதால் இனிமேல் பாட்டிலுக்கு கூடுதல் விலை வாங்க மாட்டார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது.
இருப்பினும் இந்த பிரச்னை தீரவில்லை. கோவை மண்டலத்தில் டாஸ்மாக்கில் கூடுதல் தொகைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாக கடந்த 2ம் தேதி 20 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் கடந்த 3ம் தேதி 28 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று 10க்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்பனையை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மண்டல அளவில் 6லக்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
