கோவையில் 312 கிலோ கஞ்சா தீ வைத்து எரிப்பு.. .

கோவை திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதை பொருள் விற்பனை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

கோவை சரகத்தில் நடப்பு ஆண்டில் 312 கிலோ எடையிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . இந்த கஞ்சா மூட்டை மூட்டையாக கட்டி இன்று இரவு மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீ வைத்து அழிக்கப்பட்டது

கோவை சரக டி ஐ ஜி சுவாமிநாதன் தலைமையில் இந்த கஞ்சா மூட்டைகள் தீயில் அழிக்கப்பட்டது. கோவை சரக அளவில் அவ்வப்போது கஞ்சா பான்பராக் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தீயில் அழிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கஞ்சா பறிமுதல் நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 டன் அளவுக்கு அதிகமாக போதைப்பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் இருந்து குறிப்பாக ஒடிசா ஜார்கண்ட் பீகார் மாநிலங்களில் இருந்து கோவை மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவது அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. கஞ்சா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் வட மாநில வாலிபர்கள் சிலர் தொடர்ந்து கஞ்சா கடத்தி வந்து கோவை மாவட்டத்தில் சப்ளை செய்து வருவதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *