அமைச்சர் சம்பத்குமார் உத்தரவு கோவை அரசு மருத்துவமனை எலிகளின் குழிகள் மூடல்…

கோவை அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு முன்பு எலிகள் கூட்டமாக சுற்றிக் கொண்டிருந்தன.மண்ணை தோண்டி பொந்து அமைத்து அதில் உணவுப் பொருட்களை பதிக்க வைத்து ஆபரேஷன் தியேட்டருக்குள் ஜாலியாக வலம் வந்தன

இது தொடர்பாக நமது கோவை மெட்ரோ நியூஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளிவிடப்பட்டது. இந்த பதிவுகள் பல்வேறு சமூக வலைதளங்கள் மற்றும் நியூஸ் வெப்சைட்டிகளில் அதிக அளவு பகிரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் அரசு மருத்துவமனையில் எலிகள் பிரச்சனை தீர்க்கப்படும் என உறுதியளித்தார்

மேலும் அவர் பெருச்சாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என அரசியல் அர்த்தத்தில் பதிலளித்தார். அமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து எலிகள் வலம் வந்த பகுதியில் சிமெண்ட் கலவை போட்டு மருத்துவமனை நிர்வாகத்தினர் தளம் அமைத்தனர். உடனடி தீர்வு காணப்பட்டதால் அந்த வார்டு பகுதி நோயாளிகள் மட்டுமின்றி டாக்டர்களும் நிம்மதி அடைந்தனர்.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் எமர்ஜென்சி வார்டு மட்டுமின்றி மற்ற பல வார்டுகளில் இதே போல் எலி மற்றும் பெருச்சாளி கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதை தடுக்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *