மதுக்கரையில் யானை தாக்கி விவசாயி சாவு…!

கோவை மதுக்கரை புதுப்பதி அருகே உள்ள சோளக்கரை வன எல்லை கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜ் (60) என்பவர் இன்று காலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்த யானை ஒன்று ஆவேசமாக நடராஜை தூக்கி வீசியது. அவரது காலில் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். யானை சென்றதும் அங்கே வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக இந்த யானை சின்னாம்பதி புதுப்பதி முருகன் பதி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி கொண்டிருந்தது. யானை நடமாட்டம் தொடர்பாக மதுக்கரை வனசரக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யானைகளை விரட்டாமல் வேடிக்கை பார்த்த நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக அந்தப் பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே யானை நடமாட்டம் கட்டுப்படுத்த வனத்துறையினர் முயற்சிக்கவில்லை. யானையினால் ஏற்படும் பயிர் உயிர் சேதங்களுக்கு இழப்பீடும் வழங்குவதில்லை. தொடர்ந்து வனத்துறையினர் அலட்சியமாக இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *