பிரதமர் உருவ பொம்மை விவகாரம் தொடர்பாக பாஜக புகார்…


கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் இன்று புகார் மனு வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ரமேஷ் குமார், நந்தகுமார் உள்பட கட்சியினர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அப்போது அவர்கள்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவகல்லூரி நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பாக அமைந்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகியுள்ளது.

ஆனால் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவகல்லூரி நுழைவுத்தேர்வான நீட் தேர்வு தனியார் மருத்துவ கல்லூரிகள் மருத்துவ சீட்டுகளை விற்பனை செய்வதை தடுப்பதாகவும் கேபிடேசன் என்ற பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்தவதை தடுப்பதாகவும் அமைத்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக தேசிய அளவில் சதித்திட்டம் தீட்டப்பட்டு சமூக விரோதிகள் மாணவர்கள் என்று போலியாக தங்களை காட்டி சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று காலை திராவிட தமிழர் கட்சி அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள் இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பதுடன் மக்களின் அமைதியான வாழ்கை சீர்குலையும். எனவே தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்ட விரோதமாக அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தும் நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட வேண்டும் .

போராட்டங்கள் நடப்பத்தை முன் எச்சரிக்கையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். கோவையில் இன்று திராவிடர் தமிழர் கட்சி சார்பில் பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த அமைப்பினர் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டனர். ஆனால் அந்த அமைப்பினர் கட்டாயம் போராட்டம் நடத்துவார்கள் என எதிர்பார்த்து பாஜக வினர் வந்திருந்தனர். அவர்கள் வராத நிலையில் இவர்கள் ஏமாற்றத்துடன் புகார் மனு அளித்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *