தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரண் ஆபரேஷனுக்காக கோவை வருகை…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர் மகன் நடிகர் ராம்சரண் ஆகியோர் இன்று தங்களது குடும்பத்தினருடன் கோவை வந்தனர். ராம்சரண் கை மணிக்கட்டு பகுதியில் ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை இருப்பதாக தெரிகிறது.

இதற்காக அவர் தந்தை மற்றும் குடும்பத்தினருடன் கோவையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் அவர் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நாளை காலை அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. அவருக்கு ஓரிரு நாள் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படும் என தெரிகிறது.

கோவை வந்த சிரஞ்சீவி மற்றும் ராம் சரணை காண ரசிகர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். அவர்களிடம் கையை உயர்த்தி மகிழ்ச்சியை தெரிவித்து சென்றனர். காரில் வந்த சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் மருத்துவமனை நிர்வாகிகளை சந்தித்து பேசினார்கள். இந்த மருத்துவமனையில் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் பலரும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. தெலுங்கு சூப்பர் நடிகர்கள் வந்துவிட்டதால் மருத்துவமனை வளாகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *