கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் நன்கொடை முறைகேடு… ?!

கோவை மண்டல இந்து கோயில் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் முத்து கணேசன் கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு அனுப்பிய புகார் மனுவில்

கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் சில முறைகேடுகளும் திருட்டுத்தனங்களும் நடக்கிறது. ராஜகோபுர பணிக்காக பக்தர்கள் நிறைய பேர் நன்கொடை கொடுத்துள்ளார்கள். அந்த பணம் முறையாக இந்து சமய அறநிலையத்துறை வங்கி கணக்கு வைக்காமல் ஒரு நபரின் தனிப்பட்ட வங்கி கணக்கில் வைத்து பணி செய்கிறார்கள்.

கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் பக்தர்களிடம் நன்கொடையாக பணம் பெறுகிறார்கள். அதை | கணக்கில் கொண்டு வராமல் கோயில் சார்பில் செலவு செய்ததாக போலி கணக்கு காட்டும் நிலை இருக்கிறது.

துணிக்கடை நிர்வாகத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் வாடகைதாரராக இருந்து வருகிறார்கள். அதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிர்ணயம் செய்யப்பட்ட நியாய வாடகை வசூல் செய்யவில்லை.

பழைய வாடகையை பெற்றுக்கொண்டு கமிஷனர் அலுவலகத்தில் நடைபெறும் வழக்குகளுக்கு சரியாக ஆஜராகாமல் இருக்கிறார்கள். இதற்கு பின்னணியில் முறைகேடு இருக்கலாம்.

கோயிலுக்கு சொந்தமான கடைகளில் மாற்று மதத்தினர் இருவர் கடை நடத்தி வந்தார்கள். அவர்கள்

இருவரும் வெளியேறி விட்டார்கள். தற்பொழுது அவர்களுக்கு மாற்றாக இருவரை தன்னிச்சையாக

வாடகைதாராக அமர்த்தி இருப்பதாக தெரிகிறது.

இதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஒப்புதல் வழங்கப்பட்டதாக என தெரியவில்லை. ஒப்புதல் வழங்கியிருந்தால் ஆவணங்களில் அவர்களது பெயர் வந்திருக்கும். ஆனால் வரவில்லை, கோயில் பாதைகளில் வியாபார கடைகள், ஆக்கிரமிப்பு இருக்கிறது. இதனால் தேரோட்டம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. கோனியம்மன் கோயிலை தொடர்ந்து கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலிலும் முறைமேடுகள் நடந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் மோசடி நடக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷிடம் விளக்கம் கேட்க பல முறை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் செல்போன் தொடர்பை ஏற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *