17 வயது சிறுமிக்கு டார்ச்சர், 15 வயது சிறுவன் மீது வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது ‘சிங்கப்பெண்’ மூலம் இளம்பெண் புகார் அளித்தது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கோவை மாநகர போலீஸ் சார்பில் செயல்பட்டு வரும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அவசர உதவி எண் 1091 -யை தொடர்பு கொண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து ‘சிங்கப்பெண்’ போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், தான் 17 வயதாக இருந்த போது 15 வயது சிறுவனை காதலித்ததாகவும், அப்போது அந்த சிறுவன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்து தற்போது இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த பெண் காதலித்ததாக கூறிய 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுவன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக சிங்கப்பெண்’ போலீசார் மூலம் 19 வயது இளம்பெண் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *