கள்ளக் காதலியை கொலை செய்த வாலிபர் தந்தையுடன் கைது…

பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோடங்கிபாளையம் செல்லும் சாலையில், ஒரு தோட்டத்து பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது.

கிணத்துக்கடவு போலீசார் பெண்ணை எரித்து கொன்ற குற்றவாளியை தேடி வந்தனர். கொலை நடந்த சாலையில் இருந்து இரண்டு நபர்கள் பைக்கில் பொள்ளாச்சியை நோக்கி செல்லும் காட்சியும், ஒட்டி செல்பவரின் முகமும் பதிவாகியிருந்தது.

இதை வைத்து விசாரித்த போது பழனி முத்து(35) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

பழனிமுத்துவின் தந்தை குருநாதனின் சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.பழனி முத்துவும், தந்தை குருநாதனும், சிலை ஆண்டுகளுக்கு முன்

பொள்ளாச்சி அருகேயுள்ள ஆட்சிபட்டியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, இருவரும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது தன்னுடன் வேலை செய்த காயத்ரி என்பவரை பழனிமுத்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில், மூன்று வருடங்களுக்கு முன்பு அதே கடையில் பணியாற்றிய,ஜமீன் கொட்டாம்பட்டியை சேர்ந்த லோகநாதனின் மனைவி சங்கீதா(30)என்பவருடன் பழனி முத்துவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

மனைவி காயத்ரி பலமுறை எச்சரித்து வரும் பழனி முத்து தொடர்ந்து சங்கீதாவுடன் தொடர்பு வைத்திருந்தார். இதனால் காயத்ரி, கடந்த மூன்று வருடங்களாக இவரை விட்டு பிரிந்து மகள்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு,கிணத்துக்கடவில் உள்ள காமராஜர் நகர் பகுதியில்,ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பழனிமுத்துவும் சங்கீதாவும் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில், சங்கீதாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் பழனி முத்துவுக்கு தெரிய வர அவர் சங்கீதாவை கண்டித்துள்ளார். இது தொடர்பாக சங்கீதாவுக்கும் பழனி முத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பழனிமுத்து கத்தியால் குத்தி சங்கீதாவை கொலை செய்தார். பின்னர் தனது தந்தையிடம் விவரங்களை கூறி அவரது உதவியால் சடலத்தை தீ வைத்து எரித்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுக்கு சடலத்தை சாக்கு பையில் போட்டு கொண்டு சென்று தீ வைத்து எரித்துள்ளனர். கண்காணிப்பு கேமராவால் தந்தை மகன் இருவரும் மாட்டிக் கண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *