உக்கடம் பெரியகுளம் கரை உடையும் அபாயம்

கோவை உக்கடம் பெரியகுளத்தில் கரும்புக்கடையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் வகையில் 5 ஆண்டிற்கு முன் குளக்கரையில் ரோடு போட்டார்கள்.

ஏற்கனவே இந்த பகுதி வாக்கிங் தளமாக இருந்தது. இதில் இருந்த இன்டர்லாக் கற்களை அகற்றி பின்னர் தார் ரோடு போட்டார்கள். உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணியின் போது இந்த ரோடு தான் பிரதானமாக மாற்று பாதையாக பயன்படுத்தப்பட்டது. 1.6 கி.மீ தூரம் அமைந்த இந்த ரோடு தற்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. சில வாகனங்கள் இந்த வழியாக செல்கிறது.

இந்த ரோட்டில் பல இடங்களில் விரிசல் விட்டு பிளந்த நிலையில் காணப்படுகிறது. மண் சரிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. குளக்கரை ரோடு பாதியாக துண்டித்து சரியும் அபாயம் இருக்கிறது. குளத்தின் நீர் தேக்க உயரம் 12.75 அடி 24.12 மில்லியன் கன அடி நீர் தேக்க கொள்ளளவு கொண்டது.

231 ஏக்கர் ஆயக்கட்டு பரப்பு உள்ள இந்த குளத்தில் தற்போது 40 சதவீதம் தான் நீர் இருப்பு உள்ளது. இதில் முழு அளவில் நீர் தேங்கினால், தொடர்ந்து கனமழை பெய்தால் மண் சரிவு, குளக்கரை: பாதை உடைப்பு மேலும் அதிகமாகும் அபாயம் இருக்கிறது. சாதாரண விரிசல் என மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக அலட்சியம் காட்டி வருகிறது.

விரிசல் விட்ட பகுதியில் ரோட்டை பலமாக்க, மணல் மூட்டை தடுப்புகளை அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குளக்கரை உடையும் அபாயம் இருந்தும். மாநகராட்சி அவட்சியம் காட்டுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குளக்கரை கீழ் பகுதி ரோட்டில் அதிகளவு வாகனங்கள் சென்று வருகிறது. எனவே பாதுகாப்பு கருதி கரையை பலமாக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

One thought on “உக்கடம் பெரியகுளம் கரை உடையும் அபாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *