திருட முயன்ற வடமாநில போதை வாலிபர் மீது தாக்குதல்
கோவை ரயில் நிலையம் அருகே சுமார் 30 வயது மதிக்கதக்க சட்டை அணியாத வடமாநில வாலிபர், இன்று இரவு பிரியாணி கடை ஒன்றில் புகுந்தார்.
அங்கே ஊழியர்கள் உணவு சப்ளை செய்து கொண்டிருந்த போது அவர்கள் கண் முன்பே பொருட்களையும், பணத்தையும் எடுக்க முயன்றார். அவர்கள் விரட்ட முயன்ற போது அவர் செல்லாமல் கல்லா பெட்டியை தேடினார். அவர்கள் எவ்வளவு முயன்றும் முடியாத நிலையில் குத்தியை எடுத்து அடித்து விரட்டினர். அடி வாங்கியும் செல்லாமல் அவர் தொடர்ந்து கடைக்குள் செல்ல முயன்றார்.அனைவரும்
சில நிமிட நேரம் போராடி அவரை கடையில் இருந்து அனுப்பினர். அப்போது கடைக்கு வெளியே நின்ற காரின் கதவுகளை திறந்து திருட முயன்றார். கார் கதவுகளை திறக்க முடியாத நிலையில் அவர் சைடு மிரர் உடைத்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை விரட்ட முயன்ற போதும் அவர் செல்லவில்லை. மாறாக ரோட்டில் கிடந்த கற்களை எடுத்து தாக்க முயன்றார்.
மேலும் ரோட்டில் செல்பவர்களிடம் பணம் பறிக்க முயன்றார். அவரை பார்த்த மக்கள் பயத்தில் தப்பியோடினர். ரயில் நிலையம் அருகேயிருந்த வங்கி முன் ரோட்டில் அமர்ந்த உட்கார்ந்தும், படுத்தும் போக்குவரத்திற்கு தடை செய்தார். போதையில் சட்டையின்றி தள்ளாடிய அந்த வாலிபரால் இரவு பரபரப்பு ஏற்பட்டது.
