கோவை ரயில்வே ஸ்டேஷனில் பாலியல் டார்ச்சர்: வாலிபர் மீது பெண் தாக்குதல்

கோவை ரயில்நிலையம் வழியாக வடமாநிலத்திற்கு அதிகளவு ரயில்கள் இயக்கப்படுகிறது.

ரயில்களில் பயணம் செய்ய வடமாநிலத்தினர் அதிகளவு ரயில் நிலையம் முன் காத்திருக்கிறார்கள். இன்று இரவு ரயில் நிலையம் முன் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் ரயில்களுக்காக காத்திருந்தனர். பலர் துணி, பாய் போட்டு படுத்திருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர், அருகே படுத்து தூங்கிய இளம்பெண்ணிடம் வாலிபர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் எழுத்து நின்று அந்த வாலிபரை எட்டி உதைத்து தாக்கினார். மேலும் அவரின் கன்னத்தில் தொடர்ந்த பளார் விட்டார். அருகேயிருந்த அந்த பெண்ணின் கணவரும் அந்த வாலிபரை தரமாறியாக தாக்கினார். அப்போது அங்கே கண்காணிப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்தனர்.

அந்த வாலிபர் உச்ச கட்ட போதையில் இருந்துள்ளார். அங்கே இருந்தவர்கள் அவரை எழுப்ப முயன்ற போது அவர் எழ வில்லை. அவரை பிடித்து இழுத்தும் வரவில்லை இந்த நிலையில் போலீசார் அங்கே தூங்கியிருந்தவர்களை பெட்டி படுக்கையுடன் அங்கேயிருந்து விரட்டி அனுப்பினர். அதே வளாகத்தில், வாலிபர் ஒருவர் செல்போன் திருட முயன்றதாக தெரிகிறது.

இதனை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அவரை மடக்கி பிடித்தனர். இதையறிந்த ரயில்வே போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வழக்கமான பாணியில் கவனித்து விரட்டி விட்டனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *