ஆற்று விநாயகர் கோவில் நடை அடைப்பு…
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உப கோயிலான ஆற்று விநாயகர் கோயில் உள்ளது .
இத்கோவில் வருட ஏலத்தில் விடுபட்டு கணிசமான தொகை கோவிலுக்கு வருமானமாக பெறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 16.13 லட்ச ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி தொகையுடன் ஏலம் விடப்பட்டது. ஏலக்காலம் முடிவடைந்த பிறகு தொடர்ச்சியாக அதே ஏலதாரர் மூலமாக நாள் வாடகைக்கு ஆற்று விநாயகர் திருக்கோயில் நடத்தப்பட்டது.
ஆனால் தற்பொழுது இத்கோயிலில் அமாவாசை காலங்களில் தனியார் புரோகிதர் மூலம் ஆற்று விநாயகர் கோயில் வளாகத்தில் தர்ப்பணம் செய்து வசூலிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.
ஆற்று விநாயகர் கோயிலில் திருமணம் செய்ய அனுமதி இல்லை. கோயில் பூஜை செய்து கொள்ளும் உரிமம் கடந்த 31-07-2026 அன்று நடைபெற்ற பொது ஏலம் எடுக்கப்படவில்லை. இதனால் பட்டீஸ்வரர் சுவாமி கோயில் பூசாரிகள் ஆற்று விநாயகர் கோயில் பூஜை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இங்கே வழக்கம்போல் பூஜைகள் நடத்தப்படவில்லை. பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய வரும் பொதுமக்கள் ஆற்று விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்துவது காலம் காலமாக நடக்கிறது. பெருமைமிக்க இந்த கோவில் ஏலம் போகாத விவகாரம் தொடர்பாக நடை அடைக்கப்பட்டு பூஜை செய்யாமல் இருப்பது பக்தர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
