டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு…

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்களின் கூட்டு குழு கூட்ட முடிவின்படி வரும் 28 -ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கோவை காட்டூர் பகுதியில் கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், மாநில தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில், ஏடிபி மாவட்ட பொருளாளர் தங்கவேல், செயலாளர் சுதாகர், மாநில இணை செயலாளர் மாரிமுத்து, எல்பிஎப் மாவட்ட தலைவர் ராக்கிமுத்து, டாஸ்மாக் சங்க செயலாளர் தமிழ்செல்வன், சிஐடியு செந்தில்பிரபு, ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 28-ம் தேதி நடக்கும் காலவரையற்ற போராட்டத்தில் கோவை டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், நிலையாணை சட்டங்களை உருவாக்குதல், ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்த வேண்டும். ஒழியர்களுக்கு சாதகமான நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். தவெக அரசின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 5 ஆண்டுகள் பணி முடித்த டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக டாஸ்மாக் விற்பனை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

One thought on “டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *