கோவையில் 2206 அரசு பஸ்களில் ரூட் போர்டு…

கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 2,206 அரசு பஸ்களில் ரூட் போர்டு என்ற வழித்த பெயர் பலகை பொருத்தப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் முகமதுநாசர் உத்தரவின்படி கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து கிளைகளிலும் அரசு பஸ்களின் வழித்தட பெயர் பலகைகளின் குறைபாடுகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பஸ்கள் பணிமனையில் இருந்து இயக்கத்துக்கு வரும் போது, அதன் உட்புறம் தூய்மையாகவும், வழித்தட பெயர் பலகைகள் சரியான நிலையில் வெளிப்புறத்தில் தெளிவாக தெரியுமாறும் இருக்க வேண்டும் என அலுவலர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அவ்வப்போது கிளைகள் மற்றும் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் போதும் வழித்தட பெயர் பலகைகள் முறையாக செயல்படும் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து தற்போது பொதுமக்களின் பார்வைக்கு பஸ்களின் வழித்தடத்தை தெளிவாகவும் எளிதாகவும் தெரிந்து கொள்ளும் வகையில் நகரப் பேருந்துகள் மற்றும் புறநகரப் பேருந்துகளுக்கு ரூட் போர்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி பகுதிகளில் மொத்தம் 1,171 நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 1,006 பேருந்துகளில் ரூட் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல், மண்டலத்தில் இயக்கப்படும் 1,379 புறநகரப் பேருந்துகளில் 1,700 பேருந்துகளில் ரூட் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய வழித்தடத்தை பஸ்சில் ஏறுவதற்கு முன்பே எளிதாக அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பேருந்துகளிலும் ரூட் போர்டுகளை பொருத்தி. பொதுமக்களுக்கு வழித்தட விவரங்கள் தெளிவாக தெரியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

One thought on “கோவையில் 2206 அரசு பஸ்களில் ரூட் போர்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *