கோவையில் கட்டிட மேஸ்திரி கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

கோவை அரசூர் ஊத்துப்பாளையத்தை சேர்ந்தவர் நாட்டுதுரை (50), கட்டட மேஸ்திரி. இவரின் மைத்துனர் பாண்டியன் (40), கட்டட தொழிலாளி.

இவருக்கு மது பழக்கம் இருந்தது. சம்பாதிக்கும் பணத்தை மது வாங்க அதிகமாக செலவழித்து வந்தார். நாட்டு துரையிடம் பாண்டியன் வேலை செய்து வந்தார். பணத்தை அதிகம் செலவழித்ததால் பாண்டியனுக்கு தேவைக்கு மட்டும் அவர் பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி கட்டட பணி நடைபெறும் இடத்துக்கு நாட்டுதுரை சென்றார்,

அங்கே இருந்த மைத்துனர் பாண்டியன், தனக்கான முழுமையான கூலியை வழங்க வேண்டும். பிடித்தம் செய்து தரக்கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டார். அதற்கு நாட்டு துரை சம்மதிக்கவில்லை. நீ குடித்து செலவு செய்கிறாய் எனக்கூறியதால் ஆத்திரம் அடைந்த பாண்டியன் கட்டுமானத்துக்கு பயன்படுத்திய கம்பியை எடுத்து நாட்டுதுரையின் வயிறு மற்றும் பல்வேறு இடங்களில் குத்தியதாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த நாட்டுதுரை பரிதாபமாக இறந்தார். சூலூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி சிவக்குமார். குற்றம்சாட்டப்பட்ட பாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

One thought on “கோவையில் கட்டிட மேஸ்திரி கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *