கோவையில் தேர்தலுக்குப் பின் வாக்காளராக மக்களிடம் ஆர்வம் இல்லை…

தேர்தலுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மக்களுக்கு ஆர்வமில்லை கோவை, அக்.6 கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 13,22,759 ஆண் வாக்காளர்களும், 14.21.179 பெண் வாக்காளர்களும், 534 மூன்றாம் பாலின் வாக்காளர்களும் இடம் பெற்றனர். மொத்தமாக 27,44,472 வாக்காளர்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி வெளியான வாக்காளர் பட்டியலில் 26,96,813 வாக்காளர்கள் இடம் பெற்றனர். இதில் 13.00,889 ஆண் வாக்காளர்கள், 13,95,396 பெண் வாக்காளர்கள், 528 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

பிப்ரவரிக்கு பிறகு, மார்ச் மாதம் வேட்பு மனு தாக்கலுக்கு முந்தைய நாள் வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு நடந்தது. அதில் 47,696 பேர் பட்டியலில் இடம் பெற்றனர். எஸ்ஐஆர் பணியின் போது 6.50 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அதற்கு பின்னர் நடந்த வாக்காளர் சேர்ப்பில் 1.77 லட்சம் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதற்கு பின்னர் 47,695 பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு பின்னர், மாவட்ட அளவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து பெயர் சேர்ப்புக்காக காத்திருந்தனர். தேர்தலுக்கு பின்னர் இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் வாக்காளராக புதிதாக இணைந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறுகையில், “வாக்காளர், ஓட்டு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வுக்காக இதுவரை 687 கிளப்கள் துவக்கப்பட்டது. வரும் நாட்களில் இது தொடர்பாக கூடுதலாக கிளப்கள் துவக்கப்படும்.

மாணவ, மாணவிகளுக்கு இந்த கிளப் மூலமாக தேர்தல், ஓட்டு பதிவு, வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும். எஸ்ஐ.ஆர் பணிகள் தொடர்பாக புதிய உத்தரவு பணிகள் எதுவும் வரவில்லை. ஏற்கன வே உள்ள நடைமுறையில் தான் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு பணி நடக்கிறது” என்றனர்.

5 thoughts on “கோவையில் தேர்தலுக்குப் பின் வாக்காளராக மக்களிடம் ஆர்வம் இல்லை…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *