K. V

பத்திரம் பதிவுக்கு பணம் குவியுது..

கோவை வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இன்று அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் பதிவு செய்ய 4 மாதமாக அனுமதி வழங்கவில்லை. பத்திரப்பதிவில் லஞ்சம் கேட்டு நெருக்கடி தரும் வகையில் இப்படி செய்வதாக ஓய்வு பெற்றவர்கள் புகார் அளித்தனர். அரசு போக்குவரத்துக் கழகத்தில் தடையின்மை சான்று கேட்கிறார்கள். பணி ஓய்வு பெற்ற பின்னர் எப்படி அரசு துறையில் தடையின்மை சான்று தருவார்கள். இந்தத் துறையில்…

Read More

பாறை வெடியால் பதறுது இரும்பறை..!

மேட்டுப்பாளையம் இரும்பறை பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மற்றும் அந்த பகுதி மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில், “மேட்டுப்பாளையம் இரும்பறை ஓதிமலை செல்லும் வழியில் இரண்டு கல் குவாரி இருக்கிறது. இந்த கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள் வெடி வைத்து எடுக்கப்படுகிறது. நீர் பாதை, வண்டிப்பாதை மறிக்கப்பட்டு கற்களை எடுத்து வருகிறார்கள். பொதுமக்களின் வீடுகளுக்கு குறைந்த பட்ச பாதுகாப்பு , தூர இடைவெளி கடை பிடிக்கவில்லை. மிக குறைந்த…

Read More

தரையில் படுத்து தர்ணா போராட்டம்

கோவில் பாளையம் கொண்டையம் பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்( 70 ) என்பவர் அளித்த புகார் மனுவில்எனக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனத்தினர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் அளித்தோம் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவிக்கலாம் என வந்தேன். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எனது நிலத்தை எனக்கு மீட்டு தர…

Read More

மனுக்களுக்கு மலர்வளையம் வைத்ததால் பரபரப்பு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டம் நடத்தப்பட்டது .இதில் கோவை வடக்கு தெற்கு மதுக்கரை சூலூர் மற்றும் பேரூர் தாலுகா எல்லைப் பகுதியில் வசித்து வரும் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மனு கொடுத்து வரப்பட்டது . ஆனால் இந்த மனுக்களுக்கு எந்த தீர்வும்…

Read More

கோவை துணிக்கடை வளாகத்தில் கஞ்சா செடி

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் பிரபலமான துணிக்கடையின் வாகன நிறுத்துமிடம் இருக்கிறது. இங்கே 3 அடி உயரத்தில் கஞ்சா செடி இருந்தது. இது தொடர்பாக கஞ்சா செடியின் போட்டோவுடன் தகவல் பரவியது. ரத்தினபுரி போலீசார் அங்கே சென்று விசாரித்தனர். நன்கு செழிப்பாக வளர்ந்த கஞ்சா செடியை வேறுடன் பிடுங்கி நேற்று அகற்றினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா செடி விவகாரம் சமூக வலை தளங்களில் வீடியோ பதிவுடன் வைரலாகியது. செடியை…

Read More

இன்ஜினியர் சந்திரசேகர் தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா..!

கோவை வடவள்ளி வி என் ஆர் நகர் , பொம்மனாம்பாளையம், நவாவூர் பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் 109 பிறந்தநாள் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அவிநாசி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் செம வேலுச்சாமி, எம்எல் ஏ அம்மன் அர்ஜுனன் , கேஆர்…

Read More

செட்டிபாளையத்தில் முறைகேடாக மது விற்ற2 பேர் கைது

திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவை செட்டிபாளையம் மதுக்கரை நிலம்பூர் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ளடாஸ்மாக் கடை அருகே முட்புதர் மறைவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்துவிற்பனை செய்வதாக புகார் வந்தது. கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் செட்டிபாளையம் போலீசார் சோதனை நடத்தினர். மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த தேவகோட்டையை சேர்ந்த பிரபு, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.இவர்களிடம்…

Read More

கோவையில் நெஞ்சு வலியில் தவித்தவரை ரோட்டில் விட்டு சென்ற கொடுமை…

கோவை ஆர்.எஸ்புரம் பகுதியில் நேற்று முன் தினம் அரசு பஸ் டவுன்பஸ் சென்ற போது அந்த பஸ்சில் இருந்த சுமார் 60 வயது பயணி ஒருவருக்கு நெஞ்சு வலிஏற்பட்டது . அவர் உட்கார்ந்த சீட்டில் இருந்து பஸ்சிற்குள் விழுந்தார். வாயில் நுரை தள்ள அவர் மூச்சு விடமுடியாமல் தவித்தார். இந்த நிலையில் பஸ் டிரைவர், கண்டக்டர் பஸ்சை நிறுத்தி அவரை பஸ்சிலிருந்து இறக்கி ரோட்டோரம் படுக்க வைத்து விட்டு சென்று விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த…

Read More

வறட்சியில் சிறுவாணி அணை

கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணையின் நீர் தேக்க உயரம் 49.53 அடி இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 29.88 அடியாக இருந்தது. அணையில் இருந்து 10.14 கோடி லிட்டர் குடிநீர் பெற அனுமதி உண்டு. ஆனால் நீர் மட்டம் குறைவினால் அணையில் இருந்து 6.9 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் எடுத்து சப்ளை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக குடிநீர் அளவு 25 முதல் 30 சதவீதம்…

Read More