கோவை கோர்ட்டில் கலெக்டருக்கு அதிரடியாக அபராதம்
கோவை கோர்ட்டில் நடந்த விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாத்தால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால், சாட்சிகள் செலவு தொகையாக ரூ. 55,000 வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை கோர்ட்டில் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் வழக்கு விசாரணை தொடர்ந்து தேக்கமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகியது. இந்நிலையில் இன்று கோவை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு உட்பட சில வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்குகளில் அரசு தரப்பில் வழக்கறிஞர் யாரும் நியமிக்கப்படாததால் ஆஜராகவில்லை. சாட்சி விசாரணை நடத்த முடியவில்லை. இதனால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு தரப்பில் இருந்து உரிய அரசாணை வராததால் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசு தரப்பின் தவறு காரணமாக வழக்கு ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டதாக கூறி. வழக்கு ஒன்றில் சாட்சிக்கு உரிய படி மற்றும் செலவு தொகையாக ரூ. 10 ஆயிரத்தை கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மூலமாக அரசு ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும் என நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.
இதேபோல் மற்ற 9 வழக்குகளிலும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் சாட்சிகளுக்கு செலவு தொகையாக ரூ. 46,000 என மொத்தம் ரூ. 56 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.
