கோவையில் காதலியின் நண்பரை கொலை செய்த 2 பேர் கைது

கோவை தடாகம் ரோடு மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (24).

போட்டோகிராபர் இவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் போட்டோ சூட் இருப்பதாக தனது குடும்பத்தினருடன் கூறி சில நாட்களுக்கு முன்பு சென்றார்.

ஆனால் அவர் திரும்ப வரவில்லை. இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் தடாகம் போலீசில் புகார் அளித்தனர். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே ரயில் பாதையில் வாலிபர் சடலம் கிடந்தது. போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரணை செய்தபோது காணாமல் போன பிரவீன் என தெரிய வந்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றிய விசாரித்த போது பிரவீன் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கரூர் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (26) மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் போட்டோ எடுக்க வேண்டும் எனக் கூறி செல்போனில் பிரவீனை அழைத்துள்ளனர். இதற்கு பிரவீன் சம்மதம் தெரிவித்து அவர்கள் கூறியபடி கிணத்துக்கடவு பகுதிக்கு சென்றார். அங்கே காரில் மனோஜ் குமார் மற்றும் கார்த்திகேயன் காத்திருந்தனர்

அவர்கள் பிரவீனை அழைத்து சென்றுள்ளனர். செல்லும் வழியில் அவர்கள் மதுபானம் வாங்கி கொடுத்துள்ளனர். அதிக மது குடித்து பிரவீன் மயக்க நிலையில் இருந்துள்ளார். அப்போது மனோஜ் குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் பிரவீன் கழுத்தை நெறித்து கொலை செய்து தண்டவாளத்தில் சட்டத்தை வீசி சென்று விட்டனர்.

மனோஜ் குமார் இன்ஸ்டாகிராம் மூலமாக கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த பெண்ணுடன் பிரவின் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இது மனோஜ் குமாருக்கு பிடிக்கவில்லை. பிரவீன் இருந்தால் தனது காதல் நிறைவேறாது அவர் தனது காதல் திருமணத்திற்கு இடையூறாக இருப்பார் என மனோஜ் குமார் கருதினார். எனவே போட்டோ சூட் நடத்த வேண்டும் என கூறி செல்போனில் அழைத்து பிரவீனை கொலை செய்து காதலியை தனது வசப்படுத்த திட்டமிட்டு இந்த கொலை செய்திருப்பதாக விசாரணையின் போது தெரிவித்தார் . போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காதலியை அடைய அவரது நண்பரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *