கோவையில் குவியும் வெளி மாநில குற்றவாளிகள்…!

கோவை மண்டலத்தில் வெளிமாநில குற்றவாளிகள் பதுங்குவதை கண்டறியும் திட்டங்கள் முடங்கி போனது. விசாரணை நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்வதற்காக வெளி மாநில தொழிலாளர்கள் வருகை அதிகமாகி விட்டது. திருப்பூர் பனியன், விசைத்தறி நிறுவனங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர்களும், கோவை லேத் ஒர்க்ஷாப், பவுண்டரி, பம்பு, ஆட்டோ மொபைல், நகை பட்டறைகளில் 3 லட்ச வெளியூர்வாசிகளும்,

ஈரோட்டில் பெட்சீட், நெசவு தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளியூர்காரர்களும் பணியாற்றி வருவதாக தெரிகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டம் ஏறக்குறைய பாதி வடமாநில மாவட்டமாக மாறி விட்டது.

சமீப காலமாக நைஜீரியா, கனடாவில் இருந்து வேலை தேடி தொழிலாளர்கள் வருவதும் அதிகமாகி விட்டது.

வெளி மாநிலம், வெளி நாட்டில் இருந்து வரும் தொழிலாளர்கள் குற்றங்களில் ஈடுபடுவது அடிக்கடி நடக்கிறது. பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கோவை மண்டலத்தில் தொழில் நிறுவன குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.

இவர்களில் சிலர் போலி அடையாள அட்டைகளுடன் தங்கியிருப்பதாக தெரிகிறது. குற்றங்களில் ஈடுபட்ட சிலர் தங்களது சொந்த ஊரை காலி செய்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழிலாளிகளாக அடைக்கலமாகி விட்டதாக தெரிகிறது.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 25 முதல் 40 சதவீத குற்றவழக்குகளில் வெளியூர்வாசிகள் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காண ஆதார் அட்டை மற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 125 போலீஸ் ஸ்டேஷன்களில் தொழிலாளர்களின் முழு விவர

பட்டியல் சேகரிக்கும் வகையில் பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டது. ஆனால்

இந்த திட்டத்தை தொடர போலீசார் முன் வரவில்லை. தொழில் நிறுவனங்களிடம் தொழிலாளர்களின்

விவரங்களை சேகரிக்க, போலீஸ் ஸ்டேஷனில் இதற்கான பதிவேடு தயாரிக்க போலீசார் வெளிப்படையாகவே மறுத்து விட்டனர். குற்றவாளிகளை தடுக்கும் இரு பெரிய திட்டமும் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கி விட்டது. வெளி மாநில தொழிலாளர்களால் தகராறு, தாக்குதல் தொடர்பாக அடிக்கடி புகார் வருகிறது. இந்தி, மராத்தி, ஓரியா பாஷை பேசும் தொழிலாளர்களை விசாரிக்க முடியாமல் உள்ளூர் போலீசார் திணறுகின்றனர்.

வெளி மாநில தொழிலாளர்கள் மீது புகார் வந்தால் எங்களால் பேச முடியாது என போலீசார் மறுத்துவிடுகின்றனர். மில்களில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள். கோவையில் தங்களுக்கு பழக்கமாகும் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அழைத்து சென்று குற்றங்களில் ஈடுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது.

வெளி மாநில போலீசார் குற்றவாளிகளை பிடிக்க கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல நாட்கள் முகாமிட்டு தேடுவது வாடிக்கையாகி விட்டது. ஐ.எஸ் ஆதரவு கும்பல் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் முகாமிட்டும் உள்ளூர் போலீசார் கண்டுகொள்ளவில்லை. போலீஸ் நடவடிக்கையில் அதிருப்தியடைந்த தேசிய புலனாய்வு பிரிவினர் (என்.ஐ.ஏ) கோவையில் தற்காலிக முகாம் அலுவலகம் அமைத்து தேடுதல் பணி நடத்தி வருகிறது.

கோவை மண்டலத்தில் மாவோயிஸ்ட், நக்சல், ஐ.எஸ் ஆதரவாளர்கள், கொலை, கொள்ளை குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவினரும் புகார் கூறியுள்ளனர். உள்ளூர் போலீசார் போதுமான ஆள்பலமில்லை என கண்காணிப்பு திட்டங்களையும், ஆய்வு திட்டங்களையும் மேற்கொள்வதில்லை.

குற்றவாளிகள் பதுக்குவதை தடுக்க பப்ளிக் அட்ரஸ் திட்டம், டெனன்ட் வெரிபிகேஷன் திட்டம் உதவியாக இருக்கும். இதை தீவிரமாக செயல்படுத்தினால் தான் தொழில் நகரங்களில் குற்றங்கள் குறையும் என தொழில் துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *