காம்பஸ், மயிர் கோதியால் மிரட்டி பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்த சைக்கோ…

கோவை மதுக்கரை மலைசாமி கோயில் வீதி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண்கள் இல்லாத வீட்டில் மர்ம நபர் ஒருவர் கதவைத் தட்டி புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வாரம்.

பெண் ஒருவர் நள்ளிரவில் தனியாக தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த மர்ம நபர் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். அந்த பெண் கதவை திறந்ததும் ‘மயிர் கோதி’ காட்டி குத்தி விடுவதாக மிரட்டியுள்ளார். அந்த பெண பயத்தில் சத்தம் போடாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த மர்ம நபர் மிரட்டி பாலியல் அத்துமீறல் செய்திருப்பதாக தெரிகிறது.

இன்னொரு வீட்டில் சில நாட்களுக்கு முன் இதேபோல் மர்ம நபர் சென்று தனது லீலையை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண் அவரிடமிருந்து தப்பி விட்டார். 3 நாளுக்கு முன் பெண் ஒருவர் தனியாக இருந்த வீட்டில் அந்த செக்ஸ் சைக்கோ நபர் சென்றுள்ளார். அவர் தன்னிடமிருந்த ‘காம்பஸ்’ காட்டி ஆசைக்கு இணங்காவிட்டால் குத்தி கொன்று விடுவேன் என மிரட்டியிருக்கிறார்.

அந்த பெண் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கே குவிந்தனர். தப்ப முயன்றவரை பிடித்து அடித்து உதைத்தனர், அப்போது தான் அவர் அதே பகுதியை சேர்ந்த 43 வயதான கட்டட தொழிலாளி என தெரியவந்தது. அவரை பிடித்து மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர் கஞ்சா போதையில் தள்ளாட்டத்தில் இருந்துள்ளார்.

போலீசார் இந்த நிலையில் அவர் மீது வழக்கு போட முடியாது எனக்கூறி விட்டு விட்டனர். அடுத்த நாள் விசாரிப்பதாக கூறிய போலீசார் பின்னர் இந்த விவகாரத்தை அப்படியே விட்டு விட்டனர். இந்த நிலையில் அந்த செக்ஸ் சைக்கோ நபர் தனது உறவுக்காரரான 20 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றார்.

அந்த பெண் அவரை தாக்கி தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக தனது பெற்றோரிடம் கூறினார். அவர்களும் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர். ஆனால் போலீசார் வழக்கு போட முன் வரவில்லை.

மதுக்கரை பகுதி மக்கள் கூறுகையில், “செக்ஸ் சைக்கோ நபர் அட்டகாசத்தால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். அந்த நபரின் மனைவி செக்ஸ் டார்ச்சர் தாங்காமல் தனது குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். தினமும் இரவு நேரத்தில் இந்த நபர் ஊருக்குள் தனியாக சுற்றுகிறார் எந்த வீடு திறந்து கிடக்கிறது, எந்த வீட்டில் ஆள் இல்லை என நோட்டம் விடுகிறார்.

பின்னர் கூர்மையான ஆயுகத்தை கையில் எடுத்து கொண்டு அந்த வீட்டிற்குள் சென்று பாலியல் தொந்தரவு தருகிறார். சிவர், அந்த நபர் குறித்த பயத்தில் புகார் தர முன் வரவில்லை. ஊர்மக்கள் சேர்ந்து அடித்து உதைத்தும் அந்த சைக்கோ திருந்தவில்லை. போலீசாரிடம் நாங்கள் புகார் தெரிவித்த போது. “இப்போது எதுவும் செய்ய முடியாது. தேவை என்றால் இந்திய தண்டனை சட்டம் 110 பிரிவில் ஒரு வழக்கு போட்டு விட்டு விடுகிறோம். ” என அசால்ட்டாக கூறுகிறார்கள்.

மதுக்கரை மைல்கல் பகுதியில் பெண் பலாத்கார கொலை விஸ்வரூமெடுத்துள்ளது. இன்னொரு சைக்கோ செக்ஸ் குற்றவாளி என்றால் பெரும் பதட்டமாகி விடும் என போலீசார் தயங்கி நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். சாதாரண வழக்கில் அந்த நபரை கைது செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை.

போலீசாரிடம் முறையிட்டால் அந்த நபரை பிடித்து விட்டோம். எங்கள் கஸ்டடியில் தான் இருக்கிறார் எனக்கூறி வருகின்றனர். குற்றவாளி மீது ஜாமீனில் வர முடியாத கடும் நடவடிக்கை எடுத்தால் தான் பெண்கள் நிம்மதியாக வாழ முடியும். போலீசார் நல்ல பெயர் வாங்க குற்றவாளிக்கு சாதகமாக இருக்கிறார்கள். குற்றவாளி போதை நபர் எனக்கூறி தப்பிக்க பார்க்கிறார்கள், “என்றனர். இந்த விவகாரம் மதுக்கரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *