ஆகம விதிகளின்படி கோயில்கள் இருக்கிறதா… கருத்து கேட்பு பணி தீவிரம்..

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஆகம் விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட கோயில்களை கண்டறிவதற்காக அரசினால் 6-10 2025ம் தேதி 5 நபர்களை கொண்ட குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

கோயில்களின் ஆகமம் குறித்த விவரங்கள், தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களால் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குழுவினால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. ஆகமக் குழுவினால் பரிசீலிக்கப்பட்ட 34,971 எண்ணிக்கையிலான கோயில்கள் தொடர்பான விவரங்கள் துறையின் www.hrce.tn.gov.in இணையதளத்தில் 25 8-2026 அன்று வெளியிடப்பட்டது.

இது குறித்த விவரங்களில் பொது மக்கள் விடுதல் ஏதேனும் இருப்பின் அல்லது ஏதேனும் கருத்து இருப்பின் 25-9-2026ம் தேதிக்குள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு 10-10 20/6ம் தேதிக்குள் கருத்துகள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட ஆகமக் குழுவினால் பரிசீலிக்கப்பட்ட திருக்கோயில்கள் குறித்த விவரங்கள் தொடர்பாக வரும் 5.11.2026 முதல் 25.11.2026 ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.

ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு தமிழ்நாடு இந்து சமயஅறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், 119, உத்தமர் காந்தி சாலை. நுங்கம்பாக்கம், சென்னை 34 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் வாயிலாகவும் 25.11.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் தெரிவித்திட ஆகமக் குழுவினால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *