கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தியதில் குழந்தைக்கு எச்ஐவி பரவலா… தந்தை புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் சூலூர் காட்டம்பட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான தறி தொழிலாளி புகார் மனு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு என் மனைவிக்கு பிரசவத்தின் போது ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது பெண் குழந்தைக்கு உடல எடை குறைவாக இருந்தது. இந்த நிலையில சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது சிகிச்சை அளித்தார்கள். ரத்தம் பற்றாக்குறை காரணமாக ரத்தம் செலுத்தினார்கள். சில மாதங்கள் கலந்து உடல்நல குறைவு ஏற்பட்டு மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை சேர்த்தோம் அப்போது பல்வேறு சோதனைகள் செய்தார்கள் கூடுதலாக எச்ஐவி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குழந்தைக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எச்ஐவி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் எச்ஐவி நோய் பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. கடந்த 2018ம் ஆண்டில் குழந்தைக்கு ரத்தம் செலுத்திய பின்னர் உடல் நலன் அதிகம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக இறுவரை பலமுறை நான் இந்த பிரச்சனை தொடரபாக புகார் மனு கொடுத்து விட்டேன். தொடர்ந்து மருத்துவ சோதனை என காலம் கடத்தி வருகிறார்கள். என்ன காரணத்தினால் குழந்தைக்கு எசஐவி பாதிப்பு ஏற்பட்டது என மருத்துவ குழுவினரால் கண்டறிய முடியவில்லை. கலெக்டரிடம் நான் புகார கூறிய போது அந்த புகார் தொடர்பாக அவர் கேட்கவில்லை. எச்ஐவி, எய்ட்ஸ் கட்டுபாட்டு சொசைட்டி என வழக்கம் போல் மனுவை பரிந்துறை செய்த அனுப்புகிறார்கள். நான் என் குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனை தவிர வேறு எங்கேயும் ரத்தம் செலுத்தவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி எனது குழந்தைக்கு எச்ஐவி பரவியது என தெரியவில்லை.

அரசு மருத்துவமனை நிரவாகத்தின் செயல்பாடு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் நான் ஏற்கனவே தெரியப்படுத்தி இருக்கிறேன் எனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. குழந்தையின் கல்வி மற்றும் பொருளாதார சூழ்நிலைக்காக இலவச மனை அல்லது வீடு கேட்டு இருந்தேன். அந்த உதவியும் மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை. கொடுமையான நோயுடன் என் குழந்தை போராடிக் கொண்டிருக்கிறார். என் மனைவிக்கும் உடல் நல பாதிப்பு இருக்கிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும். இலவச மனை அல்லது வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, “எங்கள் மருத்துவமனையில் அந்த பெண் குழந்தைக்கு ரத்த சிவப்பு அணு செலுத்தப்பட்டது. இதனால் குழந்தைக்கு எச்ஐவி பரவவில்லை. இதை நாங்கள் மருத்துவ பரிசோதனை மூலமாக உறுதி செய்து விட்டோம். மேலும் ரத்தத்தை நாங்கள் அப்படியே செலுத்துவதில்லை. நான்கு பிரிவாக பிரித்து பிளாஸ்மா, வெள்ளை அணு, சிவப்பு அணு என வேறு வேறு நபர்களுக்கு வழங்குவோம். பிளாஸ்மா, வெள்ளை அணு செலுத்தியவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு இல்லை, மேலும் ரத்தம் தானமாக வழங்கிய நபரிடமும் சோதனை செய்யப்பட்டது. அவருக்கு எச்ஐவி பாதிப்பு இல்லை.

இந்த குழந்தைக்கு எங்கள் மருத்துவமனை மூலமாக நோய் பாதிப்பு ஏற்படவில்லை. ஒன்றரை ஆண்டு அந்த குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து வரவில்லை. அவர்கள் வேறு எங்காவது சிகிச்சை வழங்கியிருக்கலாம், ஊசி போட்டிருக்கலாம். அந்த மருத்துவ விவரங்கள் எங்களுக்கு தெரியவில்லை எனவே அரசு மருத்துவமனையில் வழங்கிய ரத்தத்தின மூலமாக நோய் பரவவில்லை, இதை மாவட்ட நிர்வாகத்திடம் தெளிவுபடுத்தி விட்டோம், ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *