கல்லூரி ஹாஸ்டல் கேண்டீன் உணவில் புழு, பூச்சி மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
கோவை பீளமேடு நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
கல்லூரி வளாகத்தில் ஹாஸ்டல் அமைந்துள்ளது. இங்கே மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. இன்று இரவு மாணவ மாணவிகள் இட்லி தோசை சாப்பிட்டனர். அப்போது சாம்பாரில் புழு பூச்சிகள் காணப்பட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகள் விடுதி வளாகத்தில் ஒன்று திரண்டனர் . கேண்டினில் தயாரிக்கப்படும் உணவு தரமாக இருப்பதில்லை புழு பூச்சி கரப்பான் பூச்சி இருக்கிறதா என பார்க்காமல் சுகாதாரமின்றி உணவு தயாரிக்கிறார்கள்.
ஏற்கனவே இதே போல் சில முறை புழு பூச்சிகள் காணப்பட்டது. அப்போது புகார் கூறியும் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார் 2000 மாணவ மாணவிகள் இந்த கேண்டினில் உணவு சாப்பிடுவதாக தெரிகிறது. உணவு அசுத்தமான முறையில் தயாரிப்பதால் இது போன்ற நிலைமை இருக்கிறது. தண்ணீரிலும் புழு பூச்சிகள் காணப்படுகிறது. எனவே எங்கே சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். விடுதி உணவகத்திற்கு அதிக தொகை பெறப்படுகிறது. ஆனால் அந்தத் தொகைக்கு ஏற்ப உணவு வழங்கப்படுவதில்லை. புழு பூச்சியை தொடர்பாக புகார் தந்தால் இந்த மாணவ மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வேறு வழி இன்றி இந்த அவல நிலையில் நாங்கள் உணவு சாப்பிடுகிறோம் என மாணவ மாணவிகள் தெரிவித்தனர். பீளமேடு போலீசார் போராட்டம் நடத்திய மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து இரவு வெகு நேரம் கடந்த பின்னர் மாணவ மாணவிகள் தங்களது விடுதி அறைக்கு திரும்பினர். இந்தக் கல்லூரி முன்பு இன்று மதியம் போராட்டம் நடந்த நிலையில் இரவு மாணவ மாணவியரின் போராட்டமும் நடந்ததால் பரபரப்பு காணப்பட்டது.

Registration was super quick and I was able to start playing in minutes. Definitely a user friendly site. 10jiliccregister