கோவையில் 434 பேருக்கு பிடி வாரண்ட்…
கோவை மாநகரில் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக உள்ள 434 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 நாட்களில் 26 பேரை கைது செய்துள்ளனர்.
கோவை மாநகர போலீசார் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் கமிஷனர் கண்ணன், தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் வடக்கு துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டது
இதையடுத்து தனிப்படையினர் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக உள்ள பிடிவாரண்ட் குற்றவாளிகளை தேடி வந்தனர். அதில், கடந்த 3 நாட்களில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரில் பிடிவாரண்ட் பிறப்பித்து தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக தலைமறைவாக உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதில் தெற்கு சரகத்தில் 159 பேரும், வடக்கு சரகத்தில் 265 பேரும் என 434 பேர் தலைமறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை 29ம் தேதி ஒரு எஸ்ஐ, 6 போலீசார் விதம் 3 எஸ்ஐ.க்கள், 18 போலீசார் என 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 3 வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் சென்று தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
அதில், கடந்த 3 நாட்களில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே 20க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் இருப்பதும், ஒரு சிலர் உயிரிழந்து விட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படையினர் மற்றவர்களை தேடி வருகின்றனர் தலைமறைவாக உள்ள அனைவரது தகவல்களும் சேகரிக்கப்பட்டு து நடவடிக்கை எடுக்கப்படும்.
