K. V

கோவையில் போதை மாத்திரைகள் , கஞ்சா விற்பனை கணவர் மனைவி கைது

கோவை குனியமுத்தூர் மகாலட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர் சல்மான் கான் (24 ). இவர் மனைவி பாத்திமா சஹானா (20) . இவர்கள் அதே பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக குனியமுத்தூர் போலீசாருக்கு புகார் வந்தது போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்திய போது இவர்களிடமிருந்து 1400 போதை மாத்திரைகள் மற்றும் 300 கிராம் இடையில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது . போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து கஞ்சா மற்றும் போதை…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கிடைக்கவில்லை எனக்கூறி முதியவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சூலூர் அருகேயுள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (65). இவர், தனது இடத்தை அளவீடு செய்து பட்டா வழங்கக்கோரி கடந்த 2021-ம் ஆண்டில் விண்ணப்பம் கொடுத்துள்ளார். சூலூர் தாலூகா அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து காத்திருந்தார். ஆனால், இவருக்கு இதுவரை நிலம் அளந்து பட்டா வழங்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த இவர், கோவை கலெக்டர் அலுவலகத்தில்…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பத்திரம் பட்டா கேட்டு குவிந்த மக்கள்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இவர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வருகை தந்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், “நாங்கள் 33 ஆண்டுகளுக்கு முன் இங்கே இடம் வாங்கி இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் கிரய பத்திரம்…

Read More

வரும் 26ம் தேதி டாஸ்மாக் கடை மூடல்…!

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள் பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல் சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் வரும் 26ம்தேதி மீலாடி நபி தினத்தை முன்னிட்டு மூட உத்தரவிடப்படுகிறது. விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான…

Read More

கோவை மாணவி அனுஸ்ரீ இறப்பில் மர்மம்… பெற்றோர் புகார்…!

கோவையில் நர்சிங் கல்லூரி மாணவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பெற்றோர் புகார் அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர் அழகு பெருமாள்சாமி (50). இவர், நேற்று தனது மனைவி, உறவினர்களுடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: எனது மகள் அனுஸ்ரீ (20) மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் 2ம் ஆண்டு படித்து…

Read More

கோவை மாநகரில் மாணவர்கள் தங்கும் விடுதி, வீடுகளில் போலீஸ் சோதனை…!

கோவையில் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன் கொலை மற்றும் போதை பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு தொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசார், மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, சோதனை நடத்தி வருகின்றனர். கோவை புறநகரிலும் சோதனை நடத்தி வருகின்றனர். போத்தனூர், சுந்தராபுரம், ஈச்சனாரி, குனியமுத்தூர், செல்வபுரம், பி.கே.புதூர், பாலு கார்டன், கரும்பு கடை உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் அறைகள் போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். ஆண்கள் தங்கும் விடுதிகள், கல்லூரிகளை ஒட்டிய லாட்ஜ்கள் ஆகியவற்றிலும்…

Read More

கோவையில் குப்பையில் வீசப்பட்ட கோயில் சிற்ப தூண்கள்…!

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் கார் நிறுத்தும் இடத்தில் இரண்டு சிற்பத்துண்கள் வைக்கப்பட்டுள்ளது. எந்த பராமரிப்பும் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக இந்த சிற்பத்துண்கள் இங்கே காட்சி பொருளாக இருக்கிறது. கோயிலில் வைக்கப்பட வேண்டிய சிலைகள் உள்ள சிற்ப தூண்கள் இங்கே வந்தது எப்படி என யாருக்கும் தெரியவில்லை. இவற்றை இந்து சமய அறநிலையத் துறையினரும் கொண்டு செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதே போல் இதே வளாகத்தில் இரண்டு சிற்ப…

Read More

கோவையில் வீணாக கிடக்கிறது வேளாண் கட்டடங்கள்…

கோவை தடாகம் ரோட்டில் வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பயன்பாட்டின்றி கட்டிடங்கள் வீணாக கிடக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அலுவலகமாக இருந்த கட்டிடங்கள், விதை ஆய்வு மையம் பரிசோதனை கூடம் போன்றவை பயன்பாடின்றி இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. சில கட்டிடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. போதை கும்பல் இரவு நேரத்தில் இங்கே தங்கியிருந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு, மதுபாட்டில்கள், போதை மாத்திரைகள் கிடக்கிறது. மதுபானம் பயன்படுத்தும் சிலர்…

Read More

சிறுவாணி, பில்லூர் திட்டத்திற்கு ரூ. 20 கோடி கொடுத்த கோவை மாநகராட்சி…!

கோவை மாவட்டத்தில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. குடிநீர் எடுத்து உள்ளாட்சி குடிநீர் தொட்டிகளுக்கு வழங்கும் பணி குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உரியது. அந்த குடிநீரை பகிர்மான குழாய் மூலமாக பொதுமக்களின் வீடுகளுக்கு வழங்க வேண்டிய பணியை உள்ளாட்சிகள் செய்து வருகிறது. கடந்த பல ஆண்டாக உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் வாரியத்திற்கு குடிநீர் கட்டணம் வழங்கவேண்டிய தொகையை வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. தற்போது கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், பவானி குடிநீர் திட்டங்கள் மேம்படுத்த…

Read More

வாளையார் அணையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் வாலிபர்கள்…

தமிழக கேரள எல்லையில் வாளையார் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தற்போது கணிசமான அளவு நீர் தேக்கம் இருக்கிறது. இங்கே பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அபயகரமான புதை மணல், களிமண் இருப்பதால் இங்கே யாரும் குளிக்க கூடாது. குளித்தால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படும் ஏற்படுத்தும் என கேரளா பொதுப்பணி துறை நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. ஆனால் சிலர் இந்த அறிவிப்பை மீறி அணை நீர் தேக்க பகுதியில் குளிக்கிறார்கள். குறிப்பாக மாவுத்தம்பதி பிச்சனூர்…

Read More