K. V

வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ… புகையால் மக்கள் பாதிப்பு

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 630 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கே இன்று காலை திடீரென்று தீபிடித்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அங்கே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பைகளுடன் சாம்பல் எரியும் பொருட்களை கொண்டு வந்து கொட்டுவதால் இப்படி தீ பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது . புதிய குப்பைகளில் இருந்து மீத்தேன் வாயு உருவாகி அதன் மூலமாகவும் தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில்…

Read More

கோவையில் நீர் குட்டை அழிக்கப்படுவதாக புகார்

கோவை மணியகாரம்பாளையத்தில் இருந்து உடையாம்பாளையம் செல்லும் வழியில் சுப்பநாயக்கன்புதூரில் உள்ள நீர்பிடிப்பு குட்டை காணவில்லை என்று விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய புகார் மனுவில், “சுப்பநாயக்கன்புதூர் கிராமத்தில் 2.70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குட்டையை இருந்தது. இந்த குட்டையை கடந்த 2022-23ம் ஆண்டில் கோவை மாநகராட்சி நிர்வாகம் ரூ.8 லட்சம் செலவில் தூர்வாரி, குட்டையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் அறிவிப்பு பலகையும்: வைக்கப்பட்டது….

Read More

ரேஸ் கோர்ஸ் மீடியா டவர் மின்னப்போகுது…

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபாதை, பூங்கா ஏமைக்கப்பட்டது. இங்கே 15 மீட்டர் உஉயரத்தில் பிரமாண்டமான மீடியா டவர் அமைக்கப்பட்டது. இது செல்பி ஸ்பாட் ஆக மாறியது பைக்கர்ஸ் பலர் இங்கே இருந்து தங்களது பயணத்தை துவக்குவது’ வாடிக்கையானது. கோவையின் ஐகான் ஆக இது மாறியது. சமீப காலமாக இங்கே எல்இடி யின் விளக்குகள் சரியாக எரியாமல் டல்லாக இருந்தது. இதனால் பொதுமக்கள் இங்கே வருவது குறைந்து விட்டது. இதை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தினர்…

Read More

கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடம் அபகரிப்பு: சர்வேயில் கண்டுபிடிப்பு

கோவை வனக்கோட்டம் 693 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் காரமடை, மேட்டுப்பாளையம். சிறுமுகை வனசரங்கள் இருக்கிறது. இந்த பகுதிகளில் குறிப்பாக வன எல்லை விவசாய நிலங்கள் மற்றும் யானை வழித்தடங்கள் என அழைக்கப்படும் காரிடார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் சில இடங்களில் அத்துமீறல் இருப்பதாகவும் புகார் இருந்தது. இது தொடர்பாக தீவிர கள ஆய்வு நடத்த வேண்டும். என தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நில அளவை…

Read More

கோவையில் மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது புகார்

கோவை புலியகுளம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவர்களை நேற்று கணித ஆசிரியர் ஒருவர் பிரம்பால் தாக்கியதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசில் புகார் தரப்பட்டது. ஆனால் தங்களது எல்லைக்குள் இல்லை என போலீசார் புகார் வாங்கவில்லை. பீளமேடு போலீசில் மாணவரின் பெற்றோர் புகார் தந்தனர். இந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் புகார் வழக்கு வேண்டாம். அந்த ஆசிரியரை நாங்கள் பணி நீக்கம் செய்து…

Read More

கோவை மாவட்டத்தில் அழிந்து வரும் ஆறுகள்…!

ஆத்துப்பாலம் நொய்யல் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள சமாதிகள்… கோவை மாவட்டத்தில் வளம் மிக்க ஆறுகள் வற்றி போய் சாக்கடை சங்கமத்தால் நாறி நாசமாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ‘பொன்னி நதி’யான காவிரிக்கு சங்க இலக்கிய பாடல்கள் ஏராளம் உண்டு. ‘ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி, வாய்க்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி’ ‘தான் பொய்யா மலைத்தனைய கடற்காவிரி’ என்பன போன்ற பாடல்கள் கல்வெட்டுகளில் அழியாக இடம் பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 320 கி.மீ…

Read More

புழுதி பறக்கும் லாரி…கல்குவாரிகளுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் 160 கல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த கல் குவாரிகளின் இயக்கத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறையின் சார்பில் கட்டுபாட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. குவாரிகள் அனைத்தும் கம்பி வேலி போட்டு பாதுகாப்பாக நடத்த வேண்டும். வேலியை தாண்டி கால்நடைகள், மனிதர்கள் செல்வதை தடுக்க வேண்டும். வெடி வைக்கும் உரிய வெடி மருந்து சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்களுக்கு, கால்நடைகளுக்கு, விவசாய நிலங்களுக்கு…

Read More

பார்ட் டைம் வேலை என 34.41 லட்ச ரூபாய் சுருட்டல்… சைபர் கிரைம் போலீசில் புகார்

கோவை அப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர், ஆன்லைனில் வேலை வாய்ப்பு குறித்த விவரங்களை பார்த்தார். பகுதி நேர வேலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கோபிநாத்தில் பார்ட் டைம் பணிக்கு ஒப்புதல் தந்தார். அவரை ஆன்லைனில் தொடர்பு கொண்டவர்கள் பணம் முதலீடு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். கோபிநாத் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 5 தவணைகளில் 7.84 லட்சம் ரூபாய் வங்கி பரிவர்த்தனையில் அனுப்பி வைத்துள்ளார். அதன்…

Read More

சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டிலிருந்து உச்சத்தை எட்டவில்லை. இந்த தென்மேற்கு பருவமழையும் போதுமான அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்த அளவே இருக்கிறது. 50 அடி கொண்ட அணையில் தற்போது 26.70 அடி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. இதனால் முழு அளவில் குடிநீர் எடுத்து விநியோகிக்க முடியாத நிலை உள்ளது. அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். ஆனால் குறைந்த…

Read More

கோவையில் பத்திர எழுத்தர் அடித்து கொலை…!

கோவை சிங்காநல்லூர் தேவேந்திர குல வீதியை சேர்ந்தவர் வேலுசாமி (56), பத்திர எழுத்தர். இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 17ம் தேதியில் இருந்து அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டில் முகம் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார் . பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கே சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது…

Read More