பொள்ளாச்சியில்அதிமுக மாஜி அமைச்சர் படங்களுக்கு பாவாடை ,செருப்பு மாலை…!

கோவை பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே சென்டர் சென்டர் மீடியன் பகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், சிவிசண்முகம், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர் முழு உருவ படங்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் சீனிவாசன் படத்திற்கு செருப்பு மாலையுடன் பாவாடையும் அணிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 17ம் தேதி நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் சேலை தொடர்பாக பேசிய போது…

Read More

கோவையில் பறக்கும் படை சோதனை: 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!

சூலூரில் கலாமணி என்பவர் குடோனில் சிக்கிய 800 பாத்திரங்கள்.. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார்கள். முதல் நாளான 16ம் தேதி 4 இடங்களில் நடந்த சோதனையில் 30,17,150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 56,244 ரூபாய் மதிப்பிலான 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 17ம் தேதி நடந்த சோதனையில் 5. 85 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 கிலோ…

Read More

கோவையில் மாதிரி வாக்குச்சாவடி…

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்று நடத்தப்பட்டது .தனியார் கல்லூரியில் மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது . இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கூடுதல் கலெக்டர் சங்கீத் பல்வந்த் வாகே தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர் . இதில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கப்பட்டது . இதில் மாணவிகள் ஓட்டு போட பயிற்சி தரப்பட்டது. ஓட்டு போடுவது…

Read More

மாலை, மண்டபம், வாகன வாடகை எவ்ளோ…! தேர்தல் பிரிவினர் தொடர்ந்து தாமதம்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. இந்த நிலையில் அனைத்து வகையான செலவுகளிலும் அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் செலவு கணக்கு ஒப்படைக்கும் வகையில் பல்வேறு வகையான விலைப்பட்டியல் தயார் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது . இதில் உணவு பட்டியல் மட்டும் உத்தேசமாக தயார் செய்யப்பட்டிருக்கிறது . அதிலும் சில வகை உணவுகள் சேர்க்கப்படவில்லை. மாவட்ட அளவில் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தும் கார் ,ஆட்டோ, வேன், பஸ் போன்றவற்றுக்கான வாடகை விவரங்கள்…

Read More

சிறுவாணி அணையில் 20 மி.மீ., மழை

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 49.53 அடி இதில் நேற்று 19.71 அடியாக நீர் மட்டம் இருந்தது. நீர் மட்டம் 60 சதவீதத்திற்கு கீழ் குறைந்து விட்டது. 10.1 கோடி லிட்டர் வரை தினமும் குடிநீர் பெற அனுமதி உண்டு. ஆனால் அணையில் இருந்து நேற்று 5.1 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே பெறப்பட்டது. நீர் மட்டம் வேகமாக…

Read More

பணத்திற்கு ஆதாரம்: தேர்தல் பிரிவினரால் வியாபாரிகள் தவிப்பு…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக மட்டுமே பணம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும். அதற்கு மேல் பணம் வைத்திருந்தால் ஆதாரம் காட்ட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களையும் பரிசு என கருதி தேர்தல் பிரிவினர் பறிமுதல் செய்து வருகின்றனர். தேர்தல் பிரிவினர் தொழில் வர்த்தகம் தொடர்பான பணம், பொருட்கள் பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களை…

Read More

கோவையில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை வாழைமரங்கள், புடலை நாசம்…!

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக திடீர் மழை பெய்து வருகிறது. கோடைக்கு முன்பே அதிக வெப்பம் காரணமாக திடீர் வெப்ப சலன மழை பெய்து வருவதாக தெரியவந்துள்ளது.அதுவும் மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை செய்து வருகிறது. மழையின் காரணமாக சுண்டக்காமுத்தூர் பேரூர் தொண்டாமுத்தூர் ஆலந்துறை நரசிபுரம் தென்னமநல்லூர் துடியலூர் பெரியநாயக்கன்பாளையம் காரமடை மேட்டுப்பாளையம் மதுக்கரை கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் கொடி வகைகள் குறிப்பாக அவரை, புடலங்காய், பீர்க்கங்காய் பந்தல் அடியோடு சாய்ந்து நாசம்…

Read More

கோவையில் பதுக்கிய 98 கிலோ கஞ்சா பறிமுதல்…!

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் கஞ்சா மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது . போலீசார் சம்பவ இடத்திறகு சென்று விசாரணை நடத்தினர் அப்போது ஒரு பழைய கார் விற்பனை வளாகத்தில் மூட்டைகளில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர் . மொத்தம் 98 கிலோ எடையில் கஞ்சா இருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா மூட்டைகளை பதிக்க வைத்த அப்பாஸ் (27), ஜெனி…

Read More

கோவை மாவட்டத்தில் பணம் பரிசு பொருள்: 120 புகார்கள் பதிவு

புகார் கட்டுப்பாட்டு அறை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு 10 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்கப்படுகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த எரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண் 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக புகார்கள்…

Read More

கோவை கேரள எல்லை செக் போஸ்டில் 35 தேர்தல் கண்காணிப்பு கேமரா…!

கோவை கேரள மாநில எல்லையில் வாளையாறு வேலாந்தாவளம், மீனாட்சிபுரம். கோவிந்தாபுரம், கோபநாரி உள்பட 13 சோதனைச்சாவடிகள் இருக்கிறது. தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரளம் மாநிலம் வழியாக கோவைக்குள் பரிசுப்பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கவும், வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே போலீஸ், ஆர்டிஓ, கனிம வளத்துறை சார்பில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரிவின் சார்பில்…

Read More