கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளர்கள் நாளை வருகை

கோவை மாவட்டத்தில் மேட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு சூலூர், சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்ட மன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 5371 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் 90 பறக்கும் படை, 90 நிலையான கண்காணிப்பு படை அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் பல லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வியாபாரிகள், மருத்துவமனைக்கு செல்பவர்களிடம் இதுவரை பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறை,…

Read More

கோவையில் வீடியோ எடுக்க முயன்ற வாலிபரை விரட்டிய யானையால் பரபரப்பு ..

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்த ஆண் யானை ஒன்று பொன்னூத்து அம்மன் மற்றும் கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் சுற்றி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகர் பகுதியில் வலம் வந்துள்ளது. யானை வருவதை பார்த்த அந்தப் பகுதியை சேர்ந்த தொழிலாளி கமல் என்பவர் யானையை நோக்கி சென்றார் . அப்போது யானை அருகில் வந்த நிலையில் கமல் பயத்தில் யானையிடம் இருந்து தப்பி ஓட முயன்றார்.அப்போது கால் இடறி தவறி விழுந்துள்ளார் அப்போது…

Read More

தேர்தல் விதிகளை மீறினால் 6 மாதம் சிறை: திருமண மண்டபம், அச்சகங்களுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருமண மண்டபம் மற்றும் அச்சக உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கலால் துறை துணை கமிஷனர் முருகேசன் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அச்சகங்கள் முறையான அனுமதி பெற்று ஆட்சேபம் விமர்சனம் அல்லாத வாசகங்களை பிரிண்டிங் செய்ய வேண்டும். முன்னதாக அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான…

Read More

கோவை மாவட்டத்தில் சீனியர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக தபால் ஓட்டு சீட்டு விண்ணப்பம் வந்தாச்சு..

கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தபால் ஓட்டு சீட்டு விண்ணப்ப படிவங்கள்.. இந்தியத் தேர்தல் ஆணையத்தால், சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 40% மேற்பட்ட மூலம் உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, தபால் ஓட்டு போடஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனானி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட…

Read More

கோவையில் பறக்கும் படை சோதனை: 10.50 லட்ச ரூபாய் பறிமுதல்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ப்ரூக்பான்ட் ரோடு பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியபோது சரக்கு வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த ரசீது என்ற வாலிபரிடம் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்போது அவர் தனது பேக்கில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். இந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் சுங்கம் பகுதியில் இன்னொரு…

Read More

கோவையில் ஆதாரமற்ற பணம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை தீவிரம்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோடு பகுதியில் நேற்று காரில் சென்ற ஒரு நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் காரில் வைத்திருந்த 2 லட்ச ரூபாய் தொடர்பாக ஆதாரம் கேட்கப்பட்டது . உரிய ஆதாரம் இல்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதே போல் ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே…

Read More

கோவையில் பாலியல் வழக்கில் கைதான கமாண்டன்ட்டுக்கு உதவிய எஸ்ஐ மீது நடவடிக்கை

 கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் படைப்பிரிவு உள்ளது. இதில் கமாண்டன்ட் ஆக எஸ்பி அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார் பணியாற்றி வந்தார். இவர் அங்கே பணி செய்யும் பெண்கள் மற்றும் பெண் போலீசாருக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக தெரிகிறது. அவர் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பேசியுள்ளார். இது தொடர்பான புகார்கள் பெறப்பட்ட நிலையில் கடந்த மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் கோவை தெற்கு அனைத்து மகளிர்…

Read More

கோவையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை நேற்று திறக்கப்பட்டது. 10 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்க இந்த கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. மேலும் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு படைகளை கண்டறிய அந்த வாகனங்களின் நடமாட்டத்தை ஜிபிஎஸ் மூலமாக அறிய டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும் ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்க முடியும். மேலும் கட்டுப்பாட்டு அறையில் 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண்,…

Read More

கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள்

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது சட்ட மன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் எந்தெந்த சட்ட மன்ற தொகுதிக்கு எங்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு, மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்திலும், சூலூர் சட்ட மன்ற தொகுதிக்கு சூலூர் தாலுகா அலுவலகத்திலும், கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு கவுண்டம்பாளையத்தில் உள்ள வருவாய்…

Read More

கோவையில் அதிமுக பரிசு பொருட்களை அள்ள நினைத்த பறக்கும் படை..

கோவை மாவட்டத்தில் நேற்று மாலை தேர்தல் தேதி அறிவித்ததும் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டது. பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு படையினர் மாலை 6 மணி முதல் செக்கிங் துவக்கினார்கள். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வேட்டி சேலை, பாத்திரம், ஹாட் பாக்ஸ் என பரிசு பொருட்கள் டோக்கன் தந்து கொடுப்பதாக புகார் வந்தது. சில இடங்களில் பறக்கும் படை வாகனங்கள் சென்று பார்த்த போது ஒவ்வொரு வீட்டிலும் அகிமுக தந்த பரிசு பொருட்கள் இருந்ததாம். இதை யார் எப்போ தந்தார்கள்…

Read More