நிதி நிலைமை சீரான பின் 2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை:அமைச்சர் அருண்ராஜ் தகவல்…!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இரண்டு மாணவிகள் தற்கொலை செய்தது பெரும் வலியை அளிப்பதாக கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. விழாவில், கல்லூரி முதல்வர் வீரமணி தலைமையுரை ஆற்றினார். மாவட்ட கலெக்டர் பவன்குமார் முன்னிலை வகித்தார். இதில், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்று 100 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத், சட்டமன்ற…

Read More

Road damage: தரம் கெட்ட தார் ரோடு… வாகனங்கள் படாதபாடு…

கோவை மாவட்டத்தில் 483.5 கி.மீ தூர மாநில நெஞ்சாலை, 531 கி.மீ தூர மாவட முக்கிய ரோடு (MDR), 1492,8 கி.மீ தூர இதர கிராம ரோடு (ODR) என 25074 கி.மீ தூரத்திற்கு ரோடு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு வழிப்பாதையாக 604,5 கி.மீ தூர ரோடு, இடை வழிப்பாதையாக 329.8 கி.மீ தூர ரோடு, இரு வழிதட பாதையாக 640 கி.மீ தூர ரோடு, பாவு தள இரு வழிப்பாதையாக 262.2 கி.மீ தார் ரோடு,…

Read More

convict treatment: கோவை ஜி. எச்சில் கைதிகள் வார்டு ரொம்ப மோசம்…

கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தனி பிரிவு (கான்விக்ட் வார்டு) அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த வார்டு பழுதாகி கிடக்கிறது. பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட ஒய்வறை கழிவறையை விட மோசமான நிலையில் இருக்கிறது. இந்த அறையை போலீசார் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகிறார்கள். கைதிகள் வார்டு நவீன பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. கைதிகள் அடிக்கடி தப்பி செல்வதால், சிறையில் உள்ளது போல்…

Read More

New born child death : ரோட்டில் வீசப்பட்டு இறந்து கிடந்த 5 மாத ஆண் குழந்தை…

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அலுவலராக பணிபுரிந்து வருபவர் கலைவாணி (30). இவர் இன்று பணியில் இருந்தபோது, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் போன் செய்துள்ளார். அவர் பழையூர் நியூ சித்ராம்பலம் லே-அவுட், பகுதியில் சாலையோரத்தில் ஒரு குழந்தை சடலமாக கிடப்பதாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சுமார் 5 மாத ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்தார். அவரது…

Read More

Illegal affair:தொழிலாளி அடித்து கொலை செய்து சடலத்தை ரோட்டில் வீசிய கொடூரம்…

கோவை வேலாண்டிபாளையம் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் மணி (40). இவர் கூலிக்கு ஆள் பிடித்து விடும் புரோக்கர் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் கூலி முக்கு அருகே வேலைக்கு காத்திருக்கும் தொழிலாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்காக அனுப்பி வந்தார். மணிக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். மணி கட்டிட வேலைக்கு பெயர் விவரம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபரை வேலைக்கு அனுப்பினார். அந்த நபர் அடுத்த நாள் வேலை கேட்டு மணியின் வீட்டுக்கு…

Read More

கோவை சென்ட்ரல் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை செய்தனர். அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் இடைத்தரகர்கள் வாகனங்கள் போன்றவற்றில் போலீசார் சோதனை செய்தனர் இதில் கணக்கில் வராத சுமார் 64 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் பொதுமக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலமாகப் பெருமளவில் லஞ்சப் பணம் கைமாறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்…

Read More

7th finance commission: கோவை ஊராட்சிகளில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 7th finance committee (7வது நிதிக்குழு கமிஷன்) அதிகாரிகள் நாளை கோவை மாவட்டத்தில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் திட்ட பணிகள் நடக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. நிதி இல்லாமல் பெரும்பாலான பணிகள் முடங்கி போய் கிடப்பதாக தெரிகிறது. மாவட்ட அளவில் ஒவ்வொரு ஊராட்சியிலும் எவ்வளவு நிதி இருக்கிறது. எவ்வளவு வருவாய் பெறப்பட்டது, கடந்த காலங்களின் வரவு செலவு அறிக்கை விவரங்களையும் திட்ட பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர். ஊராட்சிகளில்…

Read More

கோவையில் ஜமாபந்தி; 2 நாளில் 5517 மனுக்கள் குவிந்தது…

கோவை மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 16ம் தேதி துவங்கியது. மதுக்கரை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் முகாம் நடந்து வருகிறது. வரும் 19ம் தேதி வரை ஜமாபந்தி நடத்தப்படவுள்ளது. மதுக்கரையில் 18 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கோவை வடக்கு தாலுகாவில் வரும் 25ம் தேதி வரையிலும் முகாம் நடக்கவுள்ளது.. வார விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில்…

Read More

கோவையில் செம்மண் முறைகேடு; ரூ50 கோடி வசூல் தாமதம்…

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, வெள்ளிமலை பட்டினம், போளுவாம்பட்டி, தென்கரை, சென்னனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுமதி இன்றி செம்மண் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக வருவாய்துறை மற்றும் கனிமவளத்துறையினர் சோதனை நடத்தினர். ட்ரோன் சர்வே செய்யப்பட்டது. இதில் 280 குழிகளில் 3.5 மீட்டர் ஆழம் வரை செம்மண் முறைகேடாக தோண்டி எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. சட்ட விரோத செங்கல் சூளைகளுக்காக இந்த செம்மண் லோடு கடத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரத்துடன்…

Read More

கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…

கோவை மாவட்டத்தில் பவுண்டரி, ஆட்டோ மொபைல்ஸ், கிரைண்டர் உள்பட பல்வேறு வகையான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட அளவில் தொழில் நிறுவனங்களுக்கான திறன்மிகு தொழிலாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐடிஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் தேவை அதிகரித்து வருகிறது. சிஎன்சி ஆபரேட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பணி செய்பவர்கள், வெல்டர், பிட்டர்,…

Read More