தாழியால் உருவான ஊர்

கோவையின் எல்லையில் அமைந்துள்ள வன கிராமம் சாடிவயல், எப்போதும் நீர் வளத்துடன் காணப்படும் இந்த கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய தாழிகள் கண்டறியப்பட்டது. இறந்தவர்களை அடக்கம் செய்ய இந்த முது மக்கள் தாழியை ஆதி காலத்தில் சாடி என அழைத்துள்ளனர். 6 அடி உயரம் மிக்க கூம்பு வடிவிலான இந்த பானையில் இறந்த முன்னோர்களை அடக்கம் செய்துள்ளனர். இந்த பானையில் அடக்கம் செய்து விட்டால் இறந்தவர்களின் ஆத்மா நிம்மதியாக இருக்கும் என கருதினர் . கோவை மாவட்ட…

Read More

கோனியம்மன் கோயிலில் உண்டியல் கொள்ளை : ஊழியர்கள் 4 பேர் கைது

கைதான பாலசுப்பிரமணியன் மற்றும் சரவணன் கோவை பெரிய கடை வீதியில் உள்ள காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது திருவிழா காலங்களில் பயன்படுத்தும் ஆறு உண்டியலில் ஒரு உண்டியலை காணவில்லை. அதை கோயில் ஊழியர்கள் ரகசியமாக கோயிலுக்கு பின்புறம் எடுத்துச் சென்று திறந்து அதில் உள்ள பணத்தை திருடி சென்று விட்டதாக பக்தர் ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து நேற்று…

Read More

டிப்பர் லாரி மோதி மாணவி சாவு

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் அபிராமி நர்சிங் கல்லூரி உள்ளது. இன்று மதியம் இந்த கல்லூரியில் நர்சிங் படித்து வரும் மாணவி அனுஸ்ரீ (21) தனது தோழிகள் இரண்டு பேருடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் கல்லூரி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். பைபாஸ் ரோடு கடந்து அவர் கல்லூரிக்கு செல்ல முயன்றார் . அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவருடன்…

Read More

வாடகை தராத 10 கடைகளுக்கு மாநகராட்சி சீல்

கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் கோவை மாநகராட்சி சார்பில் வணிக கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் பல கடைகளில் உரிய முறையில் வாடகை வசூலிக்கப்படுவதில்லை என புகார் வந்தது. இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆரோக்கியசாமி ரோடு டிபி ரோடு துடியலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் வாடகை தராத 10 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கடைகளில் இருந்து 56 லட்ச ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. இதுவரை 26.34 லட்ச ரூபாய் வசூல்…

Read More

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி…

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் சமூக வழி நடத்துனர்களை கொண்டு செப்டம்பர் மாதம் வரை வீடு வீடாக சென்று சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் இல்லாத குடும்பங்களில் விவரங்களை பதிவு செய்ய குடும்ப அட்டையை மட்டும் வழங்கினால் போதுமானது. தங்களது இல்லங்களில் மாற்றுத்திறனாகளிகள் இருப்பின் அடையாள அட்டை வைத்துள்ளோர் அவர்களது முழு விவரங்களை கணக்கெடுப்பாளர்களிடம் வழங்கி பதிவு செய்து கொள்ள…

Read More

டாஸ்மாக்கில் அசுத்தம்: சரி பண்ணாம அலட்சியம்…

கோவை மாவட்டத்தில் 229 டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் ‘பார்’கள் உள்ளன. இந்த கடைகள், ‘பார்’கள் உள்ள பகுதிகளில் அசுத்தம் அதிகமாகி விட்டது. குப்பை, மது பாட்டில், உணவு பொருட்களால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை அகற்றாமல் குப்பையோடு குப்பையாக ‘பார்’களை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலர், போதை ஏறி, சாலையோரம் மற்றும் ‘பார்’ வளாகங்களில் கிடக்கிறார்கள், அசுத்த சூழலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘பார்’களில் சுகாதார சீர்கேட்டுன் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்களுக்கு…

Read More

அவிநாசி ரோடு மேம்பாலம்: வாஹன் வெப்சைட்டில் விதிமுறை மீறல்களுக்கு அபராதம் போட தடை…

கோவை அவினாசி ரோட்டில் ஏஐ கேமராவில் பதிவாகும் வாகன விதிமீறல்களுக்கு மத்திய அரசின் வாகன் வெப்சைட் தளத்தில் அபராதம் விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1791 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு…

Read More

face recognising: மாறு வேடத்தில் சுற்றும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்…

face recognition system மூலமாக கைதான கார்த்திக்… கோவை நகர், புறநகரில் மாறு வேடத்தில் சுற்றும் குற்றவாளிகளை பேஸ் ரெககனிஷன் முறையில் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை நகர், புறநகரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்ட நபர்கள் பலர் ஜாமீனில் வருகின்றனர். சிலர் மீண்டும் போலீசில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகி விடுவார்கள். திருட்டு, கொலை, போதை பொருள் கடத்தல்…

Read More

பிரதமர் உருவ பொம்மை விவகாரம் தொடர்பாக பாஜக புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் இன்று புகார் மனு வழங்கப்பட்டது. கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ரமேஷ் குமார், நந்தகுமார் உள்பட கட்சியினர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அப்போது அவர்கள்மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவகல்லூரி நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பாக அமைந்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகியுள்ளது. ஆனால் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட…

Read More

பாழாகி போச்சு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டடம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக பிரிவு அமைந்துள்ளது. இதில், பழைய மற்றும் புதிய கட்டடம் இருக்கிறது. புதிய கட்டடத்தில் அலுவலக பிரிவு செயல்படுகிறது. 70 ஆண்டிற்கு முன் கட்டிய பழைய கட்டடத்தில் மாற்று திறனாளிகளுக்கான பொருட்கள், பல்வேறு ஆவணங்கள், பயிற்சிகள், மருத்துவ சோதனைகள் நடக்கிறது. மாற்று திறனாளிகள் அதிக நேரம் பழைய கட்டடத்தில் தான் காத்திருக்கின்றனர். இந்த கட்டடத்தின் கூரைகள் கீழே சரிந்து விழும் நிலையில் இருக்கிறது. மழை காலங்களில் கட்டடத்திற்குள் தண்ணீர்…

Read More